Wednesday 8 February 2012

அனன்யாவுக்கும நிச்சயதார்த்தம்.....

நாடோடிகள் படம் மூலம் அறிமுகமான நடிகை அனன்யாவுக்கும், அவரது தீவிர ரசிகரும் தொழிலதிபருமான ஆஞ்சநேயாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் அறிமுகமானவர் நடிகை அனன்யா. திருச்சூரைச் சேர்ந்தவர். சமீபத்தில் வெளியான எங்கேயும் எப்போதும் படத்தின் வெற்றி மூலம், தமிழில் இவருக்கு நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

இந்த நேரத்தில் கேராளவை சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயனுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. அனன்யாவின் தீவிர ரசிகராக ஆஞ்சநேயன் தினமும் அவரை பின்தொடர்நது சென்று காதலை வெளிப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துள்ளார்.

அனன்யா-ஆஞ்சநேயன் திருமண நிச்சயதார்த்தம் கேரள மாநிலம் திருச்சூரில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் இதில் பங்கேற்றனர்.

திருமணம் விரைவில் நடக்க உள்ளது. மலையாளம் மற்றும் தமிழில் ஓரளவு படங்களை கையில் வைத்துள்ளார் அனன்யா. திருமணத்துக்கு பின்னும் சினிமாவில் நடிக்கப் போவதாக கூறியுள்ளார்.
   
 

No comments:

Post a Comment