Wednesday 8 February 2012

வயதில் பெரியவரான சல்மானை எப்படி திருமணம் செய்ய முடியும்: அசின்...!

என்னை விட வயதில் ரொம்ப பெரியவர் சல்மான் மான். அவரை எப்படி நான் திருமணம் செய்ய முடியும் என்று சல்மான் கான் உடனான திருமண வதந்திக்கு பதிலளித்திருக்கிறார் நடிகை அசின். தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அசின், கஜனி மூலம் இந்திக்கு போனார். முதல்படமே சூப்பர் ஹிட்டாக அங்கேயே டேரா போட்டார். தொடர்ந்து சல்மான் கானுடன் லண்டன் ட்ரீம்ஸ், ரெடி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் இந்தி படவுலகில் அவ்வப்போது அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜெனிலியா-ரித்தேஷ் திருமணத்தை தொடர்ந்து, சல்மான்கானுக்கும் அசினுக்கும் திருமணம் நடக்கப்போவதாக இந்தி பட உலகில் தகவல் பரவியிருக்கிறது. இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை அசின் பேட்டியளித்துள்ளார். அதில் சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சல்மான் கானும் ஒருவர். அவருக்கும் எனக்கும் காதல் ஏதும் கிடையாது. வெறும் நட்பு மட்டும் தான். நிச்சயமாக அவரை நான் திருமணம் செய்ய மாட்டேன். காரணம் அவர் என்னை விட வயதில் ரொம்ப பெரியவர். அதுமட்டுமல்ல நான் கேரளாவை சேர்ந்தவள். அங்குள்ள பழக்க வழக்கங்களை பின்பற்றும் குடும்பத்தில் பிறந்தவள். எனவே எங்களது குடும்ப சம்பிரதாயப்படி தான் என்னுடைய திருமணம் நடக்கும். இப்போதைக்கு சினிமா மட்டும், திருமணத்திற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment