Tuesday 14 February 2012

நடிகை குஷ்பு மனு தாக்கல்...

தேர்தல் விதிகளை மீறியதாக நத்தம் போலீசார் போட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை குஷ்பு மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலின்போது நடிகை குஷ்பு திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். நத்தம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட விஜயனை ஆதரி்தது அப்பகுதியில் பிரச்சாரம் செய்தார். அவரது பிரச்சாரத்தின்போது தேர்தல் விதிகள் மீறப்பட்டதாகக் கூறி நத்தம் போலீசார் குஷ்பு மற்றும் திமுக வேட்பாளர் விஜயன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நத்தம் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் நடந்த விசாரணையின்போது நடிகை குஷ்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து அங்கிருந்து காரில் சென்று நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்நிலையில் குஷ்புவும், விஜயனும் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,

கடந்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி நத்தம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் விதியை மீறியதாக எங்கள் மீது நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான புகாரின்பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment